இளவரசர் வில்லியமின் ஓய்வு இல்லத்தில் கொள்ளை முயற்சி

பிரிட்டன் இளவரசரின் ஓய்வு இல்லத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக கூறி இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இளவரசர் வில்லியம்
இளவரசர் வில்லியம்Reuters
Published on: 

பிரிட்டன் இளவரசரின் ஓய்வு இல்லத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக கூறி இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நார்போக் பகுதி சான்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில் உள்ள இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் ஆகியோரின் ஓய்வு இல்லத்தில், சந்தேகத்திற்கிடமான வகையில் யாரோ உள்ளே புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக புகார் வந்தது. இதையடுத்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், சந்தேகத்திற்கிடமான 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.