Albenas
Albenas

காதலியை கரம்பிடித்த ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனேஸ்

பிரதமர் பதவியில் இருக்கும் போது திருமணம் செய்த முதல் ஆஸ்திரேலிய பிரதமர் என்ற பெருமையை பெற்ற அல்பனேஸ்
Published on: 

62 ஆவது வயதில் தனது காதலியை கரம்பிடித்த ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனேஸ்க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனேஸ் மற்றும் ஜோடி ஹேடன் ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு இவர்களுக்கு திருமண நிச்சயம் நடந்த நிலையில், கன்பெராவில் உள்ள பிரதமர் இல்லத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர். பிரதமர் பதவியில் இருக்கும் போது திருமணம் செய்த முதல் ஆஸ்திரேலிய பிரதமர் என்ற பெருமையை பெற்ற அல்பனேஸ் 2019 ம் ஆண்டு தனது முதல் மனைவி கார்மலை விவாகரத்து செய்தார்.

newstamil.tv