

தைவான் விமானங்களுக்கு பாகிஸ்தான் விதித்த தடை சில மணி நேரங்களிலேயே யு டர்ன் அடித்த பாகிஸ்தான் தடையை விலக்கிக் கொள்வதாக மீண்டும் அறிவிப்பு
தங்களது நாட்டு வான்வெளியை பயன்படுத்த, தைவான் விமான நிறுவனங்களுக்கு விதித்த தடையை சில மணி நேரங்களிலேயே பாகிஸ்தான் விலக்கிக் கொண்டுள்ளது.
"ஒரே சீனா" கொள்கையை ஆதரிக்கும் வகையில், தைவான் நாட்டு விமான நிறுவனங்கள் தங்கள் வான்வெளியை பயன்படுத்துவதற்கு தடை விதிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப்பும், ஆரம்பத்தில் விதிக்கப்பட்ட இந்த தடையை உறுதிப்படுத்தி இருந்தார்.