அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் 'ப்ளூ சுனாமி'

அமெரிக்காவில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்து முடிந்த இடைக்காலத் தேர்தலில், ஆளுங்கட்சியான குடியரசுக் கட்சிக்கு மக்கள் மிகக் கடுமையான தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
தேர்தல் முடிவு
அதிபர் டிரம்ப்நியூஸ்தமிழ்24x7
Published on: 

அமெரிக்க இடைக்கால தேர்தலில்...

நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகிய இரண்டையும் ஜனநாயகக் கட்சி முழுமையாகக் கைப்பற்றியுள்ளது. தனது இரண்டு ஆண்டுகால ஆட்சியின் மீதான வாக்கெடுப்பாகவே இந்தத் தேர்தலைக் கருத வேண்டும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கோரியிருந்த நிலையில், அமெரிக்க வாக்காளர்கள் அவரை முற்றிலும் நிராகரித்து ஜனநாயகக் கட்சிக்கு 'ப்ளூ சுனாமி' வெற்றியை பரிசளித்துள்ளனர்.

அமெரிக்கா
இடைக்கால தேர்தல் நியூஸ்தமிழ்24x7

பரிசு - தோல்வி...

கடந்த 2025ஆம் ஆண்டு, மீண்டும் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்த டொனால்ட் டிரம்ப், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இருந்த பெரும்பான்மை ஆதரவோடு பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வந்தார். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி, விண்ணை முட்டும் டீசல் விலை, அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு மற்றும் ஈரான் உடனான போரினால் உருவான நிதிச் சுமைகள் ஆகியவை அமெரிக்க மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின.

இதன் எதிரொலியாகவே தற்போதைய இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சிக்கு வாக்காளர்கள் மிகப்பெரிய தோல்வியை பரிசளித்துள்ளனர்.

முடக்கப்பட்ட அதிபர்...

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சியின் கைக்குச் சென்றுள்ளதால், அதிபர் டிரம்ப் இனி ஒரு முடக்கப்பட்ட அதிபராக மாறும் சூழல் உருவாகியுள்ளது. டிரம்ப் கொண்டுவர நினைக்கும் புதிய வரிச் சீர்திருத்தங்கள், சுகாதாரக் திட்டங்கள் மற்றும் உள்நாட்டுச் சட்டங்கள் அனைத்தும் இனி எதிர்க்கட்சியின் கடும் எதிர்ப்பைச் சந்திக்கும். குறிப்பாக, அரசின் நிதிச் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் ஜனநாயகக் கட்சியிடம் சென்றுள்ளதால், டிரம்பின் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மறுத்து, அரசாங்கத்தையே முடக்கும் நிலையை எதிர்க்கட்சியினர் உருவாக்க வாய்ப்புள்ளது.

அமெரிக்கா
தேர்தல் முடிவு நியூஸ்தமிழ்24x7

அதிபருக்கு எதிராக...

இதுமட்டுமன்றி, பிரதிநிதிகள் சபையின் குழுக்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கிடைத்து உள்ளதால், டிரம்ப் குடும்பத்தினர் மீதான விசாரணைகளை ஜனநாயகக் கட்சியினர் தீவிரப்படுத்த உள்ளனர். டிரம்ப் குடும்பத்தின் பங்குச்சந்தை வர்த்தகம், கிரிப்டோகரன்சி முதலீடு, வெள்ளை மாளிகை திட்டங்களுக்கான நிதி மற்றும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கு தொடர்பான ரகசிய ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தச் சம்மன் அனுப்ப எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளது.

மேலும், அதிபர் டிரம்பிற்கு எதிராக மீண்டும் ஒருமுறை கண்டனத் தீர்மானம் கொண்டுவரவும் வழியேற்பட்டுள்ளது.

என்ன செய்வார் அதிபர்?

அதேவேளையில், நாடாளுமன்றத்தின் ஆதரவு இல்லாவிட்டாலும், அதிபருக்கான சிறப்பு நிர்வாக அதிகாரங்களைப் பயன்படுத்தி சுங்க வரிகளை விதிப்பது, குடியேற்றக் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில் டிரம்ப் தனியாக முடிவெடுக்க முடியும்.

ஆனால், புதிய சட்டங்களை நிறைவேற்ற முடியாமல் அவரது உள்நாட்டுக் கொள்கைகள் பெரும் முடக்கத்தைச் சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அமெரிக்கா
அதிபர் டிரம்ப் நியூஸ்தமிழ்24x7

தனது பதவிக்காலத்தின் பாதியில் அமெரிக்க மக்கள் அளித்த இந்த எச்சரிக்கை தீர்ப்பை ஏற்றுக்கொண்டு, அதிபர் டொனால்ட் டிரம்ப் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்படுவாரா? அல்லது தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி மோதல் போக்கை தொடர்வாரா? என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

தேர்தல் முடிவு
கைகழுவிய மக்கள், முடங்கும் அதிபர் டிரம்பின் நிர்வாக அதிகாரம்