

அமெரிக்கா சென்றடைந்த பிரேசில் அதிபர் வேட்பாளர் குடும்பத்துடன் மியாமி நகரில் தரையிறங்கிய ஃபிளேவியோ மோசடி, ஊழல் புகார் விசாரணைக்கு பயந்து தப்பி ஓட்டம்
பிரேசில் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த வலதுசாரி வேட்பாளரும், எம்பியுமான ஃபிளேவியோ போல்சொனோரோ, அங்கிருந்து தப்பிச் சென்று, அமெரிக்காவின் மியாமி நகரில் குடும்பத்துடன் தரையிறங்கி உள்ளார்.
இவர் மீதான பண மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்காக, அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும்படி பிரேசில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
டிரம்ப் ஆதரவாளரான அவர், அமெரிக்கா வழங்கிய விசா மூலம் அர்ஜென்டினா மற்றும் ஈக்வடார் வழியாக பயணித்து அமெரிக்கா சென்றடைந்தார்.