

ஐக்கிய அரபு அமீரகத்தில் பேருந்தும் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் இந்தியர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். ராஸ் அல் கைமாவின் அல் வதான் சாலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பயணிகள் பேருந்து மோதியது.
பேருந்தில் 41 பேர் பயணித்த நிலையில், 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 16 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் உயிரிழந்தனர்.