டியானன்மன் சதுக்கம், பெய்ஜிங்
உலகம்
சீனாவில் வீரத்தியாகிகள் தினம் அனுசரிப்பு.. டியானன்மன் சதுக்கத்தில் தலைவர்கள் அஞ்சலி
வீரத்தியாகிகள் தினத்தை முன்னிட்டு பெய்ஜிங்கின் டியானன்மன் சதுக்கத்தில் உள்ள நினைவுச் சின்னத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரதமர் லி கியாங் உள்ளிட்ட தலைவர்கள் அலங்கார மலர்ச்செண்டு வைத்து மரியாதை செலுத்தினர்.

அக்டோபர் ஒன்றாம் தேதி சீனாவில் தேசிய தினம் கொண்டாடப்படுகிறது.
அதற்கு முன் தினம் நாட்டின் வளர்ச்சிக்கு தியாகம் செய்தவர்களின் நினைவாக வீரத் தியாகிகள் தினம் டியானன்மன் சதுக்கத்தில் அனுசரிக்கப்படுகிறது. செப்டம்பர் 30 ஆம் தேதி வீரத்தியாகிகள் விடுமுறை தினம் கொண்டாடப்பட வேண்டும் என சீன நாடாளுமன்றத்தில் 2014 ஆம் ஆண்டு சட்டம் கொண்டுவரப்பட்டது.