ஆறு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் பலி 8 ஆக உயர்ந்தது

இடிபாடுகளில் சிக்கியுள்ள 10 பேரை தேடும் பணி தீவிரம் 12-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியிடை நீக்கம்
பலுச்
பலுச்
Published on: 

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பலுச் காலனி பகுதியில் கட்டப்பட்டு வந்த 6 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில், பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

காயமடைந்த 14 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இடிபாடுகளில் சிக்கி இருக்கக்கூடிய மேலும் 10 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 12-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியிலுள்ள மற்ற சில கட்டடங்களும் சீல் வைக்கப்பட்டுள்ளன.