பனியில் மயங்கி விழுந்த உரிமையாளரை காப்பாற்றிய நாய்

நடைபாதைக்கு ஓடி மக்களின் கவனத்தை ஈர்த்த ஹோலி நாயின் குறிப்பறிந்து மயங்கி விழுந்த நபரை காப்பாற்றிய மக்கள்
Holly
Holly
Published on: 

உறைபனியில் மயங்கி விழுந்த உரிமையாளரின் உயிரை காப்பாற்றிய இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரை சேர்ந்த ஹோலி ((Holly)) என்ற நாய்க்கு, உயரிய PDSA தங்கப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

நைஜல் வாட்மோர் என்பவர் நடைப்பயிற்சிக்கு சென்றபோது, பனி படர்ந்த சந்தில் வழுக்கி விழுந்து நினைவிழந்தார். அப்போது, அவரது நாய் ஹோலி, அருகிலிருந்த நடைபாதைக்கு மீண்டும் மீண்டும் ஓடி, மக்களின் கவனத்தை ஈர்த்து, உரிமையாளரை காப்பாற்றியது