New Project (1)
உலகம்
அனைத்து வெளிநாட்டு படங்களுக்கும் 100 % வரி விதிப்பு.. ஹாலிவுட் திரைப்படத் துறையை மீட்டெடுக்க டிரம்ப் அதிரடி
அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து ஹாலிவுட் படங்களுக்கும் 100 சதவிகித வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து ஹாலிவுட் படங்களுக்கும் 100 சதவிகித வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
அதிபராக பொறுப்பேற்ற நாள் முதல் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் டிரம்ப், குறிப்பாக வரி விதிப்பு கொள்கையில் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் ஹாலிவுட் திரைப்படத் துறை நலிந்து கொண்டிருப்பதாக கூறிய டிரம்ப், மற்ற நாடுகள் அமெரிக்க ஸ்டுடியோக்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்களை ஈர்க்க பல லாபகரமான சலுகைகளை வழங்குவதாகவும், இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் கூறியுள்ளார்.

