

கோல்கீப்பர் மீது மோதி கால்பந்து வீரர் உயிரிழப்பு ஸ்பெயினின் நட்சத்திர வீரர் இயேசு டி மிகுவல் மரணம் கால்பந்து மைதானத்தில் நேர்ந்த சோகத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி
ஸ்பெயினில் நடந்த கால்பந்து போட்டியின் போது, டெனெரிஃப் அணியின் நட்சத்திர வீரர் இயேசு டி மிகுவல், மைதானத்தில் எதிரணி கோல்கீப்பருடன் பயங்கரமாக மோதி பலத்த காயமடைந்தார்.
ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.