

உலகப் புகழ்பெற்ற ஆடம்பர நகை நிறுவனமான Bulgari-யின் முன்னாள் தலைவரும், இத்தாலிய நகை வடிவமைப்பாளருமான பாவ்லோ Bulgari தனது 89-வது வயதில் காலமானார்.
ரோம் நகரைச் சேர்ந்த Bulgari குடும்பத்தின் முக்கிய உறுப்பினரான இவர், உலகளவில் ஆடம்பர நகை விற்பனையில் தனி அடையாளத்தை உருவாக்கிய நிறுவனத்தை சர்வதேச அளவில் பிரபலப்படுத்தியதில் முக்கிய பங்காற்றினார்.