Anil vikrama singh
Anil vikrama singh

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது அரசு நிதியை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில் கைது

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே, அரசு நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக எழுந்த புகாரில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
Published on: 

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே, அரசு நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக எழுந்த புகாரில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிபராக பதவி வகித்த போது 2023 செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக லண்டன் சென்ற ரணில், அரசு நிதியில் பயணம் மேற்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முன்பு ரணில் விசாரணைக்கு ஆஜரானார். நீண்ட நேரம் விசாரணை நடத்திய சிஐடி அதிகாரிகள், தொடர்ந்து அவரை கைது செய்தனர்.

newstamil.tv