பெல்ஜியம்
உலகம்
பழைய கட்டிட சீரமைப்பு பணியில் கிடைத்த தங்கம்
தங்க கட்டிகளும், நாணயங்களும் சுவர் முழுக்க பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
ரூ.98 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள், நாணயங்கள் கிடைத்தன
பெல்ஜியம் நாட்டில் பழைய கட்டடத்தில் நடந்த சீரமைப்பு பணியின் போது 98 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகள் மற்றும் நாணயங்களை 18 வயது இளைஞர் கண்டெடுத்துள்ளார். டெண்டர்மோண்டே உள்ள கட்டடத்தில் கழிவுநீர் குழாய் அமைப்பதற்காக சுவரை உடைத்த போது, தங்க கட்டிகளும், நாணயங்களும் சுவர் முழுக்க பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் 7.7என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் பலியானோர் எண்ணிக்கை 51ஆக உயர்ந்துள்ளது.
கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் 37 பேர் பலத்த காயமடைந்துள்ள நிலையில் 77 பேர் லேசான காயம் அடைந்துள்ளனர்.

