பெருமழை, வெள்ளப்பெருக்கு பாலஸ்தீனர்களுக்கு எச்சரிக்கை

நோய்த்தொற்று அதிகரிக்கக் கூடும் - WHO கணிப்பு
காசா
காசா
Published on: 
Summary

பெருமழை, வெள்ளப்பெருக்கு பாலஸ்தீனர்களுக்கு எச்சரிக்கை நோய்த்தொற்று அதிகரிக்கக் கூடும் WHO கணிப்பு

காசாவில் பெருமழை மற்றும் வெள்ளப்பெருக்கின் காரணமாக இடம்பெயர்ந்துள்ள பாலஸ்தீனியர்கள் நோய் வாய்ப்பட்டு கடும் பாதிப்படைய வாய்ப்புள்ளதாகவும், நிலைமை மேலும் மோசமடையக் கூடும் எனவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

காசாவில் இடம்பெயர்ந்த சுமார் பத்து லட்சம் மக்கள் வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

நோய்வாய்ப்பட்டு உயிரிழந்து வரும் குழந்தைகள்

காசாவில் குழந்தைகள் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்து வரும் நிலையில், காசாவுக்கு மருந்து பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்குமாறு 50க்கும் மேற்பட்ட நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தி வருகின்றன.

காசா மற்றும் ஆக்கிரமிப்பு மேற்கு கரையில் இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், பாலஸ்தீனர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

காசா
இந்திய மாலுமிகளுடன் சென்ற எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல்