சிந்து நதி நீர் ஒப்பந்தம் - இந்தியாவுக்கு பாக் எச்சரிக்கை
பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பே பிரச்சினைக்கு தீர்வு
சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு உரிமையுள்ள நீரை மறுக்கும் எந்த நடவடிக்கையும் பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என துணைப் பிரதமர் இஷாக் தார் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பே பிரச்சினைக்கு தீர்வு என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆயுதக் கிடங்கு மீது ரஷ்யா வான் தாக்குதல்
உக்ரைன் தலைநகர் கீவ் அருகே ஆயுதக் கிடங்கு மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 38 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர். ரஷ்ய தாக்குதலால் பயங்கர தீ மற்றும் தொடர் வெடிப்புகள் ஏற்பட்டன. . இரண்டு மாதங்களுக்குள் கீவ் அருகே உள்ள வெடிபொருள் கிடங்கு மீது நடத்தப்பட்ட 2-வது தாக்குதல் இதுவாகும்.
பாலஸ்தீனியர்களின் வீடுகள் சேதம்
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையின் குஸ்ரா பகுதியில் 50-க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் புகுந்து, பாலஸ்தீனியர்களின் வீடுகளை சேதப்படுத்தி, விவசாய நிலங்களுக்கு தீ வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வன்முறை சம்பவத்தைத் தொடர்ந்து இஸ்ரேலியப் படையினர் 6 பாலஸ்தீனியர்களை கைது செய்து விசாரணை நடத்தி, பின்னர் அருகிலேயே விடுவித்ததாக கூறப்படுகிறது.

