

தங்கம் விலை குறைந்தாலும் தங்க சுரங்க பங்குகளில் முதலீடு
அமெரிக்க முதலீட்டில் பாதி பணம் தங்க சுரங்கங்களில் முதலீடு
உலக சந்தையில் தங்கம் விலை குறைந்து வரும் நிலையிலும், உலகின் மிகப்பெரிய முதலீட்டாளர்களில் ஒருவரான பிரேம் வாட்சா, தனது மொத்த அமெரிக்க முதலீட்டில் சுமார் பாதி பணத்தை தங்கம் வெட்டியெடுக்கும் சுரங்க நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்துள்ளார்.
தற்போது தங்கம் விலை சரிந்தாலும், எதிர்காலத்தில் தங்கத்தின் மதிப்பு நிச்சயம் உயரும் என்ற நம்பிக்கையில் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு இந்த முதலீட்டை அவர் மேற்கொண்டுள்ளார்.