

ஈரான் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பப் பயன்படுத்தும் ரகசிய வங்கி வலையமைப்பை முடக்கும் நடவடிக்கையாக, 22 நிறுவனங்கள் மற்றும் 8 தனிநபர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
ஈரானின் எண்ணெய், பெட்ரோ கெமிக்கல் மற்றும் உலோக ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருவாயை வெளிநாடுகளுக்கு மாற்ற உதவிய நிறுவனங்கள் இந்த நடவடிக்கையில் குறிவைக்கப்பட்டுள்ளன.