என்விடியா ஊழியர்களுக்கு ஜாக்பாட் சலுகைகள்

இடைக்கால சிஇஓவாகப் பொறுப்பேற்றுள்ள கோலெட் கிரெஸ், ஊழியர்களைச் சமாதானப்படுத்தும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
என்விடியா ஊழியர்களுக்கு ஜாக்பாட் சலுகைகள்
Published on: 

சர்வதேச டெக் உலகின் ஜாம்பவானான என்விடியா நிறுவனத்தில் தற்போது பெரும் மாற்றங்களும், சலசலப்புகளும் ஏற்பட்டுள்ளன. அதன் நிறுவனர் ஜென்சன் ஹுவாங் பதவி விலகியதைத் தொடர்ந்து, இடைக்கால சிஇஓவாகப் பொறுப்பேற்றுள்ள கோலெட் கிரெஸ், ஊழியர்களைச் சமாதானப்படுத்தும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இடைக்கால சிஇஓ அதிரடி

என்விடியா நிறுவனத்தின் வருடாந்திர ஊதிய உயர்வு மற்றும் பங்குச் சலுகைகள் குறித்த பரிசீலனை, வழக்கமாக மார்ச் மாதம்தான் நடைபெறும். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள தலைமைத்துவ மாற்றம் மற்றும் பங்குச்சந்தை சரிவு காரணமாக, இந்த ஊதிய உயர்வு பரிசீலனையை முன்கூட்டி டிசம்பர் மாதத்திற்கே மாற்றி அமைப்பதாக இடைக்கால சிஇஓ கோலெட் கிரெஸ் அறிவித்துள்ளார்.

பங்குகள் சரிவு

ஜென்சன் ஹுவாங் ராஜினாமா செய்த பிறகு நடைபெற்ற முதல் ஊழியர்கள் கூட்டத்தில் பேசிய கோலெட் கிரெஸ், நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்வோம் என ஊழியர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார். நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு வருவாய் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்தபோதிலும், என்விடியா பங்குகளின் மதிப்பு 52 வார உச்சத்திலிருந்து 37 சதவீதம் சரிந்துள்ளது.

இதற்கிடையே, ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் சிஇஓ ஆக நியமிக்க வேண்டும் என ஊழியர்கள் சமூக வலைதளங்களிலும், கடிதம் மூலமாகவும் நிர்வாகக் குழுவிற்கும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஜென்சன் ஹுவாங்கும் நிர்வாகம் விரும்பினால் மீண்டும் வரத் தயாராக இருப்பதாகத் அறிவித்திருந்தார்.

மீண்டும் நியமிக்கும் எண்ணமில்லை

ஆனால், நிறுவனத்தின் புதிய வாரியத் தலைவர் ஹார்வி ஜோன்ஸ், ஜென்சன் ஹுவாங்கின் ராஜினாமாவை நிர்வாகக் குழு ஒருமனதாக ஏற்றுக் கொண்டதாகவும், அவரை மீண்டும் நியமிக்கும் எண்ணம் இல்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், புதிய சிஇஓவைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் நிர்வாக தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அடுத்த சிஇஓ யார்?

ஒருபுறம் ஜென்சன் ஹுவாங்கின் வருகைக்காக ஊழியர்கள் குரல் கொடுத்தாலும், மறுபுறம் தற்போதைய நிர்வாகத்தின் வெளிப்படையான அணுகுமுறையையும், முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வுத் திட்டத்தையும் பெரும்பாலான ஊழியர்கள் வரவேற்றுள்ளனர்.

அடுத்த சிஇஓ யார்? என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருக்க, ஊழியர்களைத் தக்க வைத்துக் கொள்ள என்விடியா நிர்வாகம் எடுத்துள்ள இந்த முன்கூட்டிய ஊதிய உயர்வு நடவடிக்கை, நிறுவனத்திற்குள் நிலவும் குழப்பத்தையும் பதற்றத்தையும் தணிக்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வீடியோவில் காணலாம்

என்விடியா ஊழியர்களுக்கு ஜாக்பாட் சலுகைகள்
NVIDIA-வில் வெடித்த பூகம்பம்