Volcano
Volcano

சீற்றத்தை நிறுத்தாத கிலாவியா எரிமலை

சுமார் 25 ஆயிரம் அடி உயரம் வரை வளிமண்டலத்தில் பரவியுள்ளதாக எரிமலையின் செயல்பாடுகளை கண்காணித்து வரும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on: 

நிறுத்தாத கிலாவியா எரிமலை :

அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள கிலாவியா ((Kilauea )) எரிமலை வெடித்து பல அடி உயரத்திற்கு தீக்குழம்புகளை கக்கி வருகிறது. இதுவரை 42-ஆவது முறையாக கடுமையாக வெடித்த எரிமலை, நேற்று முதல் மீண்டும் கடும் சீற்றத்துடன் வெடித்துச் சிதறி வருகிறது.

லாவா குழம்புகள் சுமார் ஆயிரத்து 300 அடி உயரத்திற்கு பீய்ச்சியடிப்பதுடன், சாம்பல் மற்றும் புகை மேகங்கள் கடல் மட்டத்திலிருந்து சுமார் 25 ஆயிரம் அடி உயரம் வரை வளிமண்டலத்தில் பரவியுள்ளதாக எரிமலையின் செயல்பாடுகளை கண்காணித்து வரும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

newstamil.tv