

மின்நிலையத்தில் பயங்கர தீவிபத்து: 4 பேர் பலி - 30 பேர் காயம்
அருகிலுள்ள குடியிருப்புகளுக்கும் தீ பரவியதால் பரபரப்பு
நீண்டநேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்
ஈராக்கில் மின்நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தெற்கு ஈராக்கில் உள்ள 800 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட ஹர்த்தா மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ மின் நிலையத்திலும் அருகிலுள்ள வீடுகளுக்கும் பரவிய நிலையில், தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இத்தீவிபத்தால் நாடு முழுவதும் பரவலான மின்வெட்டுகள் ஏற்பட்டது. மின் நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.