32
32

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்க்கு திருமணம்..

61 வயதான அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக அதிபர் டிரம்பின் மகள் இவான்கா, மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் பில் கேட்ஸ் உள்ளிட்ட பலர் வெனிஸ் வந்தடைந்தனர்.
Published on: 

61 வயதான அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக அதிபர் டிரம்பின் மகள் இவான்கா, மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் பில் கேட்ஸ் உள்ளிட்ட பலர் வெனிஸ் வந்தடைந்தனர்.

உலகின் 3-வது பெரிய பணக்காரரும் அமோசன் நிறுவனருமான ஜெப் பெசோஸ், முதல் மனைவியை 2020 ம் ஆண்டு விவகாரத்து செய்த நிலையில், செய்தி வாசிப்பாளரான 55 வயதான லாரன் சான்செஸ் என்பவரை காதலித்து வந்தார்.

100 கோடி ரூபாய் செலவில் இத்தாலி வெனிஸ் நகரில் இருவரின் திருமணமும் மிக ஆடம்பரமாக இன்று நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் பில் கேட்ஸ், ஆர்லாண்டோ ப்ளூம் மற்றும் ஜோர்டான் ராணி, ஓப்ரா வின்ஃப்ரே, கிறிஸ் ஜென்னர் மற்றும் கிம் மற்றும் க்ளோ கர்தாஷியன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

newstamil.tv