

அமெரிக்காவின் சியாட்டில் விமான நிலையத்தில் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற முயன்ற, 2 மெக்சிகன் நாட்டவர்களை, முகமூடி அணிந்த குடியேற்ற அதிகாரிகள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்த வீடியோ பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசா காலம் முடிந்தும் தங்கியிருந்த நபரை பிடிக்கச் சென்றபோது, மற்றொரு பயணி அதிகாரிகள் மீது சூடான காபியை ஊற்றித் தாக்கியதால் இருவரும் கைது செய்யப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.