14
14

சுரங்க தொழிலாளர்கள் 13 பேர் கடத்தி கொலை.. கொலை வழக்கில் சந்தேகிக்கப்படும் நபர் கைது

பெரு நாட்டில் சுரங்கப்பணியாளர்கள் 13 பேர் கடத்திக் கொல்லப்பட்ட வழக்கில் சந்தேகிக்கப்படும் நபரை கொலம்பியாவில் வைத்து இருநாட்டு போலீசாரும் கைது செய்தனர்.
Published on: 

பெரு நாட்டில் சுரங்கப்பணியாளர்கள் 13 பேர் கடத்திக் கொல்லப்பட்ட வழக்கில் சந்தேகிக்கப்படும் நபரை கொலம்பியாவில் வைத்து இருநாட்டு போலீசாரும் கைது செய்தனர்.

இந்த மாத தொடக்கத்தில் வடக்கு பெருவில் உள்ள ஒரு தங்க சுரங்கத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் கடத்தி கொல்லப்பட்டனர். தொடர்ந்து இந்த வழக்கில் சந்தேகிக்கப்படும் மிகுவல் ரோட்ரிக்ஸ் (( Miguel Rodriguez )) என்ற நபர் கொலம்பியாவில் உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் அந்நாட்டு காவல்துறை உதவியுடன் அவரை பெரு போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், சந்தேக நபரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து விலங்கிட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

newstamil.tv