

கடந்த 1977ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட வாயேஜர் 1 விண்கலம் 16 பில்லியன் மைல்களுக்கும் அதிகமான தொலைவைக் கடந்த விண்கலம்
நாசாவின் வாயேஜர் 1 விண்கலம் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைக்க உள்ளது. கடந்த 1977ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட இந்த ஆளில்லா விண்கலம், பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தொலைவை எட்டும் மனிதகுலத்தின் முதல் விண்வெளிப் பொருளாக மாற உள்ளது.
அதாவது, சுமார் 16 பில்லியன் மைல்களுக்கும் அதிகமான தொலைவைக் கடந்து பயணித்து இந்த மைல்கல்லை எட்டவுள்ளது.