33
உலகம்
வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் பதவி விலக திட்டம்? முகமது யூனுஸ் ராஜினாமா செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்
வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், பதவி விலக திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், பதவி விலக திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பேசிய மாணவர்கள் தலைமையிலான தேசிய குடிமக்கள் கட்சியின் தலைவர் நித் இஸ்லாம், ராஜினாமா முடிவு குறித்து அறிந்ததும் யூனுஸை சந்தித்தாகவும், அவரும் ராஜினாமா பற்றி யோசித்து வருவதாக கூறியதாகவும் தெரிவித்தார்.
மேலும் நாட்டில் தற்போது நிலவும் சூழலில் பணியாற்றுவது கடினமாக இருப்பதாக யூனுஸ் கூறியதாகவும், அனைவரும் அவருடன் இணைந்து பணியாற்றுவார்கள் என்று தாம் நம்புவதாகவும் என்று தெரிவித்தார்.
ராணுவ தளபதியுடன் ஏற்பட்ட உரசல் உள்ளிட்ட நெருக்கடிகளால் யூனுஸ் ராஜினாமா முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

