வங்கதேசத்தில் வன்முறைக்கு ஷேக் ஹசீனா கட்சியே காரணம்

அவாமி லீக் கட்சியை குற்றம்சாட்டிய பிரதமர் தாரிக் ரஹ்மான் அவாமி லீக் கட்சியினர் கலவரத்தை உருவாக்குவதாக குற்றச்சாட்டு
தாரிக் ரஹ்மான்
தாரிக் ரஹ்மான்
Published on: 

வங்கதேசத்தில் ஸ்திரமின்மையை ஏற்படுத்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி சதி செய்வதாக பிரதமர் தாரிக் ரஹ்மான் குற்றம்சாட்டியுள்ளார். கலவரத்தை உருவாக்க அவாமி லீக் ஆதரவாளர்கள் தீவைப்பு மற்றும் படுகொலைகளில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கட்டாய கடத்தல்கள், படுகொலைகள், பயங்கரவாதம் மற்றும் மக்களின் வாக்குரிமையை பறிக்கும் அரசியலுக்கு மீண்டும் திரும்ப விரும்பவில்லை என்றும், அனைவரும் ஒன்றிணைந்து பயங்கரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.