WHite house
WHite house

வெள்ளை மாளிகை அருகே நடந்த துப்பாக்கிச் சூடு

அதிபர் டிரம்ப் உடனடியாக 500 தேசிய பாதுகாப்பு படை துருப்புகளை அங்கு அனுப்பி கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.
Published on: 

வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அலுவலகங்கள், உணவகங்கள் என பரபரப்பாக காணப்படும் ஃபராகுட் சதுக்கத்திற்கு அருகே பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபட்டிருந்த போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. உடனடியாக துப்பாக்கிசூடு நடத்தியவரை பாதுகாப்பு படையினர் சுற்றி வைத்து பிடித்து, விசாரணை செய்ததில் அவர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 29 வயது ரஹ்மத்துல்லா லக்வாத் என தெரியவந்தது. இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப் உடனடியாக 500 தேசிய பாதுகாப்பு படை துருப்புகளை அங்கு அனுப்பி கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.

newstamil.tv