9
9

அதிபர் டிரம்பை சந்தித்த தென்னாப்பிரிக்க அதிபர் ராமபோசா.. அமெரிக்காவிற்கு வழங்க விமானம் இல்லை என நகைச்சுவை பேச்சு

அதிபர் டிரம்ப் உடனான சந்திப்பின் போது உங்களுக்குக் கொடுக்க விமானம் இல்லை என தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா நகைச்சுவையாக கூறினார்.
Published on: 

அதிபர் டிரம்ப் உடனான சந்திப்பின் போது உங்களுக்குக் கொடுக்க விமானம் இல்லை என தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா நகைச்சுவையாக கூறினார்.

வெள்ளை மாளிகையில் நடந்த இந்த சந்திப்பின் போது , 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள கத்தார் விமானத்தை சர்ச்சைக்குரிய முறையில் ஏற்றுக்கொண்டது குறித்து அதிபர் டிரம்பிடம் நிருபர் ஒருவர் கேள்வி கேட்டபோது கோபமடைந்த டிரம்ப் அந்த நிருபரை கடுமையாக திட்டினார்.

அப்போது நிருபர் மற்றும் டிரம்ப் இடையே நிலவிய பதற்றத்தை தணிக்கும் வகையில் தென்னாப்பிரிக்க அதிபர் ராமபோசா உங்களுக்குக் கொடுக்க என்னிடம் விமானம் இல்லை என நகைச்சுவையாக கூறினார்.

newstamil.tv