

மன்ஹாட்டனில் உள்ள புகழ்பெற்ற ஐந்தாவது அவென்யூவில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட அணிவகுப்பில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
என்விடியா நிறுவனத்தின் எதிர்காலம் குறித்த விவாதம்
செயற்கை நுண்ணறிவு துறைக்கு தேவையான அதிநவீன சிப் தயாரிப்பில் என்விடியா நிறுவனம் உலகளவில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் நிலையில், அதன் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் மீது எழுந்துள்ள உளவுத்துறை தொடர்பு தொழில்நுட்ப உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீன உளவுத்துறை சந்தேகத்தின் பெயரில் விசாரணையை எதிர்கொண்டுள்ள பெண் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு, அமெரிக்கா - சீனா இடையேயான தொழில்நுட்ப போரில் என்விடியா நிறுவனத்தின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
சீன உளவு பெண்ணுடன் உறவு குறித்த குற்றச்சாட்டு மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் காரணமாக என்விடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங்கை Jensen Huang's நீக்குவது குறித்து அந்நிறுவனம் பரிசீலிக்க உள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க இயக்குநர் வாரியம் அவசரக் கூட்டத்தை நடத்தத் தயாராகி வருவதாக the Wall Street Journal செய்தி வெளியிட்டு உள்ளது.
ஜென்சன் ஹுவாங் மீதான சர்ச்சையால் என்விடியாவின் பங்குகள் 8 சதவீதம் சரிந்து 600 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்துள்ளது.
Nvidia அடுத்த தலைமைச் செயல் அதிகாரி யார்?
என்விடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங்கை பதவி நீக்கம் செய்வது குறித்து அந்நிறுவனம் பரிசீலிக்க உள்ள நிலையில் அடுத்த தலைமைச் செயல் அதிகாரி யார் என்பதில் போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கோலெட் கிரெஸ் Colette Kress மற்றும் துணைத் தலைவர் இயன் பக் Ian Buck ஆகியோர் முதன்மை போட்டியாளராக உள்ளனர்.
இருப்பினும் Arm, AMD, Apple, Amazon மற்றும் Google ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த வழிநடத்தும் தலைவர்களை தேர்ந்தெடுக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
சாதுர்யமாகப் பயணிகளை காப்பாற்றிய விமானி
நேபாளத்தின் பொக்காராவில் பலத்த காற்று காரணமாக ஹாட் ஏர் பலூன் கட்டுப்பாட்டை இழந்து சுழன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பலூனின் வேகத்தைக் குறைப்பதற்காக விமானி தரையில் இருந்த ஊழியர்களை நோக்கி வீசிய கயிறும் பாதியிலேயே அறுந்து விழுந்ததால் பதற்றம் அதிகரித்தது.
இதனையடுத்து சாதுரியமாகச் செயல்பட்ட பலூன் விமானி, பயணிகளுடன் பலூனைப் பாதுகாப்பாகத் தரையிறக்கினார்.
வீட்டு வாடகை உயர்வுக்கு எதிரான போராட்டம்
ஸ்பெயினில் அதிகரித்து வரும் வீட்டு வாடகை உயர்வு மற்றும் வீட்டுவசதி நெருக்கடியைக் கண்டித்து நடத்தப்பட்ட நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தின் போது, போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
பார்சிலோனாவில் இரவு நேரத்தில் முகமூடி அணிந்த சில போராட்டக்காரர்கள் கடைகளைச் சேதப்படுத்தியதோடு, குப்பைத் தொட்டிகளுக்குத் தீ வைத்ததால் காவல்துறையினருடன் மோதல் வெடித்தது.
நாடு முழுவதும் வன்முறை தொடர்பாக 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.