

வானில் அடுத்தடுத்து நான்கு சூப்பர் மூன் நிகழ்வுகள் நடைபெற உள்ளன. பூமிக்கு மிக அருகில் நிலவு வரும்போது வழக்கமான முழுநிலவை விட சுமார் 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் பிரகாசமாகவும் தோன்றுவதே சூப்பர் மூன் என அழைக்கப்படுகிறது.
அதன்படி, இன்று , டிசம்பர் 23, ஜனவரி 22 மற்றும் பிப்ரவரி 20 ஆகிய தேதிகளில் முழுநிலவு நிகழ உள்ளது.