USA JD WAN
உலகம்
துணை அதிபர் வீட்டில் மர்ம நபர் சரமாரி கல்வீசி தாக்குதல்
இந்த சம்பவம் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்ஸின் ஓஹியோ வீட்டின் மீது சரமாரியாக கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபரை போலீஸார் கைது செய்தனர். சம்பவம் நடந்தபோது வான்ஸ் குடும்பத்தினர் யாரும் வீட்டில் இல்லாததால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. ஜே.டி.வான்ஸ் அல்லது அவரது குடும்பத்தினரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலா என புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.

