நேபாளம்
நேபாளம்

ஒவ்வொரு உயிரையும் காப்பதே அரசின் முதன்மையான இலக்கு

நாட்டின் அனைத்து அரசு இயந்திரங்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்துள்ளார்.
Published on: 

நேபாள பிரதமர் பாலேந்திர ஷா பேச்சு

ஒவ்வொரு உயிரையும் காப்பதே அரசின் முதன்மையான இலக்கு என்று நேபாள பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், நாட்டின் அனைத்து அரசு இயந்திரங்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்துள்ளார்.

நேபாளத்துக்கு சீனா அவசர நிதியுதவி

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தைத் தொடர்ந்து, சீனா அவசர நிதியுதவி, நிவாரணப் பொருட்கள் மற்றும் மீட்புக் குழுக்களை அனுப்பியுள்ளது. சுரங்க மீட்புப் பணிகளில் நிபுணத்துவம் பெற்ற இரண்டு குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்துள்ளன.

மேலும், செயற்கைக்கோள் படங்கள், நீரியல் தகவல்கள் மற்றும் வெள்ள எச்சரிக்கை தரவுகளையும் சீனா நேபாளத்துடன் பகிர்ந்துள்ளது.

மண்ணுக்குள் புதைந்த 6 வயது சிறுமி  சுமார் 3 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், ரசுவா மாவட்டத்தில் மண்ணுக்குள் புதைந்த 6 வயது சிறுமி சுமார் 3 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது. சுமார் 3 நாட்களுக்குப் பிறகு மீட்புப் படையினர் சிறுமியை கண்டுபிடித்து பாதுகாப்பாக மீட்டனர்.

பின்னர் மருத்துவ சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டுவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

newstamil.tv