

விண்வெளி வீரர்களின் உடைகளில் உருவாகும் நிலைமின்சார பிரச்சனை தீர்வு காண்பவர்களுக்கு ரூ.1.39 கோடி பரிசு வழங்கப்படும்
நிலவில் விண்வெளி வீரர்களின் உடைகளில் உருவாகும் நிலைமின்சார பிரச்சனைக்குத் தீர்வு காண்பவர்களுக்கு ஒரு கோடியே 39 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என நாசா தெரிவித்துள்ளது.
விண்வெளி வீரர்கள் நிலவின் தென் துருவப் பகுதிகளில் நடக்கும்போது, நிலவின் தூசி மற்றும் பிளாஸ்மா காரணமாக அவர்களின் விண்வெளி உடைகளில் ((Spacesuits)) அதிகப்படியான எதிர்மறை நிலைமின்சாரம் சேர்வதாக கூறப்படுகிறது.