Mexico
Mexico

சாலையின் குறுக்கே ஓடிய சிறுமியை காப்பாற்றிய இளைஞர்

குழந்தை சாலையின் குறுக்கே ஓடியது. அதனை பார்த்த தாயும், சூப்பர் மார்க்கெட்டின் ஊழியரும் குழந்தையை காப்பாற்ற ஓடினர்.
Published on: 

சூப்பார் மார்க்கெட் ஊழியரின் செயலால் காப்பாற்றப்பட்ட குழந்தை

மெக்சிகோவின் Puebla நகரில் சாலையை ஓடிய சிறுமியை சூப்பர் மார்க்கெட் ஊழியர் சாதூரியமாக காப்பாற்றிய காட்சி வெளியாகி உள்ளது. அச்சாலையில் கார்கள் வேகமாக சென்ற நிலையில், குழந்தை சாலையின் குறுக்கே ஓடியது. அதனை பார்த்த தாயும், சூப்பர் மார்க்கெட்டின் ஊழியரும் குழந்தையை காப்பாற்ற ஓடினர்.

ஹாரி - மேகன் மீண்டும் அரச கடமைகளை ஏற்கமாட்டார்கள்

இங்கிலாந்து திரும்பிய இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்லே மீண்டும் அரச கடமைகளை ஏற்கமாட்டார்கள் என்றும் சாதாரண குடிமக்களாகவே கருதப்படுவார்கள் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மன்னர் சார்லஸ் சார்பில் அரசுதுறை மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு அனுப்பட்ட கடிதத்தில், 2020-ல் அரச கடமைகளிலிருந்து விலகியபோது எடுக்கப்பட்ட முடிவுகளில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச குடும்பத்தின் பிரதிநிதிகளாக எந்தவொரு அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரகடாவ் எரிமலை வெடித்து சிதறுகிறது

இந்தோனேசியாவின் கிரகடாவ் எரிமலை வெடித்து தீப்பிழம்புகள் மேல்நோக்கி வீசி அடிக்கப்பட்டன. லம்பங் மாகாணத்தின் தெற்கு லம்பங்கில் உள்ள எரிமலை கடந்த 5ஆம் தேதி வெடித்து சிதறிய நிலையில், அருகிலுள்ள குடியிருப்புகளில் வசித்து வரும் மக்கள் வெளியேறினர்.

newstamil.tv