இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் முக்கிய தளபதிகள் பலி

2023 அக்டோபர் 7 தாக்குதலில் முக்கிய பங்காற்றியவர்கள் ஹமாஸ் தலைவரின் மகன் தப்பிவிட்டதாகவும் தகவல்
இஸ்ரேல்
இஸ்ரேல்
Published on: 

காசாவில் இஸ்ரேல் படைகள் நடத்திய 2 தனித்தனி தாக்குதல்களில், 2023 அக்டோபர் 7 தாக்குதலில் முக்கிய பங்காற்றிய ஹமாஸ் அமைப்பின் தளபதிகள் உட்பட 4 கொல்லப்பட்டனர்.

மத்திய காசாவில் நடத்திய தாக்குதலில் நுக்ஃபா பிரிவின் துணைத் தளபதி யூசுப் அல் ஐதி உட்பட 3 பேர் கொல்லப்பட்டதாகவும், மற்றொரு தாக்குதலில், ஹமாஸ் பிரிவு தளபதி தியாப் அல் ரஹ்மான் ராதி கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.