சுறா தாக்கியதில் பெண் உயிரிழந்த சோகம்

உயிரிழந்த பெண்ணின் விபரங்கள் தெரியாத நிலையில், அது குறித்து விசாரணை நடத்தி வருவதாக கூறிய போலீசார்
Beach closed
Beach closed
Published on: 

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் சுறா தாக்கியதில் பெண் ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். போர்ட் மெக்குவாரிக்கு ((Port Macquarie))அருகே Crowdy கடற்கரையில் சர்ஃப் ஸ்பாட்டில் இரண்டு பேர் சுறாவால் கடிக்கப்பட்டதாக வந்த தகவலின் பேரில் அங்கு விரைந்த அவசர குழுக்கள் காயமடைந்த நபரை மீட்டு விமானம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பினர். உயிரிழந்த பெண்ணின் விபரங்கள் தெரியாத நிலையில், அது குறித்து விசாரணை நடத்தி வருவதாக கூறிய போலீசார் பாதுகாப்பு காரணங்களுக்காக கடற்கரை மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

newstamil.tv