

சீனாவின் ஷென்சென் நகரில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு உச்சி மாநாடு வரும்19ஆம் தேதி நடைபெற உள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்திக்க உள்ளனர். அணு ஆயுதக் குறைப்பு, சர்வதேச வர்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் உலக அமைதி குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற உள்ளன.