Ukrine attACK
உலகம்
ரஷ்ய எண்ணெய் கப்பல்கள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
அவ்வழியாக சென்ற மற்றொரு ரஷ்ய எண்ணெய் டேங்கர் கப்பல் மீதும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
துருக்கி அருகே கருங்கடலில் ரஷ்யாவின் எண்ணெய் கப்பல்களை, நீரில் செல்லும் ட்ரோன் மூலம் தாக்கி அழித்ததாக உக்ரைன் கூறியுள்ளது. ரஷ்யாவிற்கு சொந்தமான கைரோஸ் என்ற சரக்கு கப்பல் துருக்கியின் கோசேலி மாகாணத்தில் உள்ள கருங்கடல் பகுதியில் நோவோரோசிய்க் நோக்கி சென்றது. பாஸ்பரஸ் ஜலசந்திக்குள் நுழையும் இடத்துக்கு அருகில் சென்றபோது அந்த கப்பல் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் கப்பல் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து அங்கு விரைந்த மீட்புப்படையினர் கப்பலில் சிக்கி தவித்த 25 பேரை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் நிகழ்ந்த ஒரு மணி நேரத்திற்குள், அவ்வழியாக சென்ற மற்றொரு ரஷ்ய எண்ணெய் டேங்கர் கப்பல் மீதும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
