மகிந்திரா நிறுவனம் தனது XUV 7XO காரை பிரமாண்டமான முறையில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதிக பாதுகாப்பு, சொகுசான பயணம் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதியுடன் வெளியாகியுள்ள இந்த காரின் ஆரம்ப விலை 13 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வரும் 14-ம் தேதி முதல் முன்பதிவு தொடங்குகிறது.