எலான் மஸ்கின் மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் டெல்லி, மும்பையை தொடர்ந்து பெங்களூருவில் தனது ஷோரூமை திறக்கவிருப்பதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு மும்பையில் தனது முதல் ஷோரூமை திறந்த டெஸ்லா நிறுவனம், அடுத்த ஒரு மாதத்தில் டெல்லியிலும், அடுத்ததாக குருகிராமிலும் அடுத்தடுத்த ஷோரூம்களை திறந்த நிலையில், தற்போது பெங்களூருவில் அடுத்த ஷோரூமை திறக்கவுள்ளது.