BIG STORIES

கண்ணகி நகர் கபடி கார்த்திகாவுக்கு அநீதி? திறமைக்கு பரிசு சதியா?

சிங்கக்குட்டி போல சீறிப் பாய்ந்து எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா, காமன்வெல்த் போட்டியில் களத்திலேயே கண்கலங்கி நின்ற வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், கார்த்திகாவின் கண்ணீருக்கு தலைமை பெண் பயிற்சியாளர் தான் காரணம் என்ற பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Azhagiri Arumugam

தங்க மகள் கார்த்திகா

பத்துக்கு பத்து வீட்டில் வறுமையின் பிடியில் பிறந்து வளர்ந்து கபடியில் கால் பதித்து, செல்லும் இடமெல்லாம் பதக்கங்களை அள்ளி வரும் தங்க மகள் கார்த்திகாவுக்கு, பாகுபாடு காட்டப்படுவது விளையாட்டு ஆர்வலர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

கண்ணகி நகர் கார்த்திகா...

இந்த பெயரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. வலி நிறைந்த பயணத்தின் வெற்றி முகம் தான் கண்ணகி நகர் கார்த்திகா. பிறந்தது சென்னை கண்ணகி நகர். தாய் ஆட்டோ ஓட்டுநர், தந்தை கட்டுமான தொழிலாளி. இது தான் கார்த்திகாவின் BACKGROUND. கபடி போட்டியை பற்றி தெரியாதவர்கள் கூட கார்த்திகாவின் ஆட்டத்தை பார்த்து வாயடைத்து நிற்பார்கள். மின்னல் வேகத்தில் கபடி பாடி செல்வதாலேயே கார்த்திகா எக்ஸ்பிரஸ் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

கண்ணகி நகர் கார்த்திகா

தமிழகத்தின் தங்க மகள்

10 ஆண்டுகளாக தேசியப் போட்டிகளில் தங்க பதக்கம் வெல்லாமல் இருந்த தமிழ்நாடு அணிக்கு தங்கம் வென்று கொடுத்தார் கார்த்திகா. தமிழ்நாடு கபடி அணிக்காக 14 தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று 10 பதக்கங்களை வென்றிருக்கிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய அணியின் துணைத் கேப்டனாக செயல்பட்டு அணி தங்கப்பதக்கம் வெல்ல முக்கியப் பங்காற்றி இருந்தார்.

அப்போது தான் கார்த்திகாவின் திறமை பற்றி எல்லாருக்கும் தெரிய ஆரம்பித்தது.

இதுதவிர, இந்த ஆண்டு நடைபெற்ற சீனியர் தேசிய மகளிர் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழ்நாடு அணிக்காக விளையாடிய கார்த்திகா ஒட்டுமொத்தமாக 81 ரெய்டு புள்ளிகளைக் குவித்து, இந்தியாவின் நம்பர் 1 ரெய்டர் ஆக மாறினார். கார்த்திகாவின் அசாத்திய தனிநபர் ஆட்டத்திறனால் மட்டுமே, தமிழ்நாடு மகளிர் கபடி அணி சுமார் 32 ஆண்டுகளுக்குப் பிறகு சீனியர் தேசிய கபடி சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கம் வென்று சாதனை படைத்தது.

கார்த்திகாவுக்கு அநீதி

மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்

இப்படி திறமை வாய்ந்த கபடி வீராங்கனை கார்த்திகாவை, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவிதா செல்வராஜ், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அடக்குமுறைக்கு ஆளாக்குவது கபடி ரசிகர்களை ஆத்திரத்திற்குள்ளாக்கியுள்ளது.

முதலாவது காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் கார்த்திகா இடம்பெற்றிருக்கிறார். ஆனால், திறமையான வீராங்கனையான கார்த்திகாவை போட்டிகளில் விளையாட விடாமல் SUBSTITUE ஆக ஓரங்கட்டி உட்கார வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

வாய்ப்பு மறுப்பு

மலேசியா அணிக்கு எதிரான ஆட்டத்திலும், சிங்கப்பூர் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் கார்த்திகாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்க, பின்னணியில் இந்திய கபடி அணியின் தலைமை பயிற்சியாளர் கவிதா செல்வராஜ் தான் இருப்பதாக சொல்லப்படுகிறது.

தலைமை பயிற்சியாளரான கவிதா செல்வராஜ் தமிழ்நாட்டை சேர்ந்தவர் தான் என்ற நிலையில், தமிழ்நாட்டு வீராங்கனையான கார்த்திகாவை ஓரங்கட்டி உட்கார வைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்குவது

அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. காமன்வெல்த் போட்டியில் கார்த்திகா ஓரங்கட்டப்பட்ட விவகாரத்தின் நெருப்பு கொளுந்து விட்டு எரிய, ஏற்கனவே பல போட்டிகளில் கார்த்திகாவுக்கு இதே அநியாயம் நடந்திருப்பதாக சொல்கிறார்கள் விளையாட்டு ஆர்வலர்கள்.

கார்த்திகா புறக்கணிப்பு

புறக்கணிக்கப்பட்ட கார்த்திகா

2024ஆம் ஆண்டு கேலோ இந்திய போட்டியின் போதும் கார்த்திகாவுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போக, 2025ஆம் ஆண்டு நடந்த ஜூனியர் கபடி போட்டியிலும் கார்த்திகா புறக்கணிக்கப்பட்டதாக அதிர வைக்கும் தகவலும் கிடைத்துள்ளது. இதற்கெல்லாம் காரணம் தலைமை பயிற்சியாளர் கவிதா செல்வராஜ் தான் காரணம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

பயிற்சியாளர்கள் என்றால் அனைவரையும் சமமாக பாவிக்க வேண்டுமே தவிர, பாகுபாடு காட்டக் கூடாது. ஆனால், கார்த்திகா மீது தனிப்பட்ட பகையை வளர்த்துக் கொண்ட கவிதா செல்வராஜ், ஒவ்வொரு போட்டியிலுமே ஓரங்கட்டி உட்கார வைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கி சோதித்து பார்ப்பதாக சொல்லப்படுகிறது.

உரிய அங்கீகாரம்

எளிய குடும்பத்தில் பிறந்தாலும் திறமையால் சாதித்து காட்ட முடியும் என எடுத்துக்காட்டாக இருக்கும் கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு அரங்கேறும் அடக்குமுறையை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.