இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள தொகுதிகளை குறிவைத்து, முதல்வர் விஜய் பயணம் மேற்கொள்கிறார். நவம்பர் 2ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலைக்கு செல்ல உள்ளார். நவம்பர் 3ஆம் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அரசு விழாவில் பங்கேற்க உள்ளார். நவம்பர் 14ஆம் தேதி நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்துக்கு முதல்வர் விஜய் செல்கிறார்.
வரும் நவம்பர் 14 ஆம் தேதி நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்துக்கு முதல்வர் விஜய் செல்கிறார். குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
சிறையில் பாதுகாப்பு, கண்காணிப்பு பணிகளில் எவ்வித தொய்வும் ஏற்படக்கூடாது; பணியில் மெத்தனமாகவோ, கவனக்குறைவாகவோ செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார். தேனி தேக்கம்பட்டி கிளைச் சிறையில் காவலர்களை தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பிய சம்பவத்தில், சிறை பொறுப்பு கண்காணிப்பார் நாகேஸ்வரனை சஸ்பெண்ட் செய்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது. குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவாக உள்ள குடும்பங்களுக்கு காப்பீட்டு பிரீமியத்தை அரசே செலுத்தும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.