’பெரியார் அறிவுலகம் மட்டுமல்லாது பல நூலகங்களில் முறைகேடு நடந்துள்ளது. கன்னிமாரா நூலகத்தில் 500-க்கும் மேற்பட்ட புத்தகங்களை நானே பறிமுதல் செய்தேன்; இது போன்ற ஊழல் எந்த மாநிலத்திலும் இனி நடைபெறக்கூடாது என்பதற்காக பறிமுதல் செய்யப்பட்ட குப்பை புத்தகங்களை காட்சிப்படுத்த உள்ளோம்.’ என, டெல்லியில் அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி அளித்துள்ளார்.
முதல்வருக்கு துதிபாடுவதா?
’திருச்செந்தூரில் முப்பாட்டன் முருகப்பெருமான் திருவிழாவில் முதலமைச்சருக்கு துதிபாடுவதா? அரோகரா முழக்கத்தை முதலமைச்சர் விஜய்க்கும், அமைச்சர் ரமேஷுக்கும் எழுப்பியது வன்மையான கண்டனத்திற்குரியது; கோடிக்கணக்கான தமிழர்களின் இறை நம்பிக்கையை இழிவுபடுத்தியவர்கள் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார்.
கடும் நடவடிக்கை தேவை
’ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியது உண்மையெனில், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் தலையிட்டு விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அமைச்சர்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி தவறு செய்யத் தொடங்கி உள்ளனர் என பாமக தலைவர் அன்புமணி கூறி உள்ளார்.