ஆனால், யாருக்கு எப்படியோ? "இந்த ஆண்டு ஐயாதான் தியேட்டர்களில் ராஜா," என சீன் பட கதாநாயகன் சூர்யா செம சீனாக வலம் வருவதாகவும், ஒரே ஆண்டில் 3 படங்களை தன்வசமாக்கிய சந்தோஷமே அவருக்கு தீபாவளி போனஸை இரட்டிப்பாக்கி விட்டதாகவும் சினிமா வட்டாரம் கூறுகிறது.
தீபாவளி ரேஸில் சீன், மூக்குத்தி அம்மன்-2
வழக்கமாக தீபாவளிக்கு முன்னணி நடிகர்களின் நான்கைந்து படங்களாவது ரிலீஸ் ஆகி தியேட்டர்களில் சரவெடி பட்டாசுகள் தெறிக்கும். பிரம்மாண்ட பிளக்ஸ் பேனர், பாலாபிஷேகம், கொண்டாட்டத்தில் போட்டா போட்டி, கூடவே ரசிகர்களின் காதைக் கிழிக்கும் ஆரவாரம் என தியேட்டர்களில் தான் ஒரிஜினல் தீபாவளியையே கண்கூடாக பார்க்க முடியும்.
ஆனால், இந்த ஆண்டு தீபாவளிக்கு அப்படி எந்த கொண்டாட்டமும் இருப்பதற்கான வாய்ப்புகள் மிக மிகக்குறைவு என்பதுதான் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமே.
ஒரே ஆண்டில் 3 படங்கள்
சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள சீன் திரைப்படம் நவம்பர் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அதேபோல், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்-2 திரைப்படமும் வெளியானது. இந்த 2 திரைப்படங்கள் மட்டும்தான் தீபாவளி ரேஸிலேயே உள்ளன.
வெறும் 2 படங்கள் மட்டும் வெளியாவது தீபாவளி ஃபீவருக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு வருத்தம்தான்.
ஆனால் இந்த ஆண்டு சீனே நான்தான் என சூர்யா படுகுஷியில் உள்ளாராம். அதிலும், ஒரே ஆண்டிலேயே கருப்பு, விஸ்வநாத் அன்ட் சன்ஸ் என அடுத்தடுத்து 3 படங்கள் ரிலீஸ் ஆகி மகிழ்ச்சியை தூரம்போகாமல் அருகிலேயே வைத்துள்ளது கூடுதல் துள்ளலாம்.
ஒரு ஆண்டில் நடித்தது
2005ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் மாயாவி, கஜினி, ஆறு ஆகிய 3 படங்கள் வெளியானது. அதில் மாயாவி குறி தப்பினாலும் மற்ற 2 படங்களும் நினைத்ததைவிட வெற்றியில் சக்கைப்போடு போட்டது. அடுத்து 2010ல் சிங்கம், ரத்த சரித்திரம் ஆகிய படங்களில் நடித்திருந்த சூர்யா, மன்மதன் அம்பு படத்தில் ஒரு ஒரு பாடலில் மட்டுமே தலைகாட்டியிருப்பார்.
அதனால், அதனை 3 படங்களில் நடித்துள்ளார் என எடுத்துக் கொள்ள முடியாது. அதேபோல், 2011ல் 7 ஆம் அறிவு படத்தில் மட்டும்தான் முழுமையாக நடித்திருப்பார், அவன் இவன் மற்றும் கோ படங்களில் சிறப்புத் தோற்றத்தில்தான் நடித்திருப்பார்.
21 ஆண்டுக்குப் பிறகு...
இவற்றையெல்லாம் கணக்கிற்கு வேண்டுமானால் ஒரே ஆண்டில் சூர்யாவிற்கு 3 பிராஜக்ட் என எடுத்துக் கொள்ளாலாம். ஆனால், ஒரே ஆண்டில் முழுமையாக 3 படங்களில் சூர்யா ஹீரோவாக நடித்துள்ளது என்றால் 2005க்குப்பிறகு வெளியான கருப்பு, விஸ்வநாத் அன்ட் சன்ஸ் மற்றும் சீன் படங்கள் தான்.
அப்படி பார்த்தால், 21 ஆண்டுகளுக்குப்பிறகு ஒரே ஆண்டிலேயே 3 படங்களை நடித்து முடித்துள்ள மகிழ்ச்சி சூர்யாவிற்கு கட்டாயம் இருக்கத்தானே செய்யும்? அதிலும், தீபாவளிக்கே தனது சீன்தான் சீனிலேயே உள்ளது என்றால் அதுதானே அவருக்கு நிஜ சரவெடி.
தீபாவளிக்கு 2 படங்கள்
மொத்தத்தில் சூர்யாவின் சீனும், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 படங்கள் மட்டும்தான் தீபாவளி விருந்து. விஜய் ஆன்டனி நடிப்பில் உருவாகி உள்ள அப்பாக்குட்டி படம் தீபாவளியையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நவம்பர் 20ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதேபோல், நடிகர் பிரபுதேவாவின் Moon Walk திரைப்படமும் தீபாவளி ரேஸில் இருந்தே பின்வாங்கி உள்ளது. இதனிடையே, நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள ஓம் திரைப்படத்தின் இசை வெளீயிட்டு விழா நவம்பர் 6 தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளது.
என்ன பேசப் போகிறார் தனுஷ்?
இதில் கலந்துகொள்ள உள்ள நடிகர் தனுஷ் தனது நற்பணி இயக்கத்தின் செயல்பாடுகள் பற்றி பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கெனவே முதலமைச்சர் விஜய் போன்று தனுசும் அரசியலில் என்ட்ரி ஆக உள்ளார், அதனால்தான் ஒவ்வொரு காயையும் பார்த்து பார்த்து நகர்த்தி வருகிறார், சமீபத்திய டெல்லி பயணம்கூட அரசியல் நகர்வுக்கான அடித்தளம்தான் என பேசப்பட்டு வரும் நிலையில் நாளை என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பும் பலரது மத்தியில் எழுந்துள்ளது.
. அதிலும், முதலமைச்சர் விஜய் நடிகராக இருந்தபோது பின்பற்றிய அதே வழியை தான் நடிகர் தனுசும் பின்பற்றி வருவதாக கூறப்படுவதால் இசை வெளியீட்டு விழாவை அரசியல் குறித்த அறிவிப்பு என ஆவலோடு பலரும் எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர்.