நடிகர் கமல்ஹாசன் திரையில் காலடி எடுத்து வைத்து 66ஆண்டுகள் நிறைவைடைந்ததை குறிக்கும் வகையில் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
1960-ல் களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமா பயணத்தை தொடங்கி, கடந்த 7 தசாப்தங்களாக திரைத்துறையில் கொடிகட்டி பறந்து வரும் கமல்ஹாசனுக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.