த்ரிஷா 
சினிமா

எம்ஜிஆர் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் "பயோபிக்"

ஜெயலலிதா கதாபாத்திரத்தில் த்ரிஷாவை நடிக்க வைக்க முயற்சி

Manigandan Raja

எம்ஜிஆர் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் "பயோபிக்" ஜெயலலிதா கதாபாத்திரத்தில் த்ரிஷாவை நடிக்க வைக்க முயற்சி

மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் வாழ்க்கையை மையமாகக் கொண்டு புதிய பயோபிக் உருவாகவுள்ளது.

நடிகர் ஜே.எம்.பஷீர்

"புரட்சி தலைவர் எம்ஜிஆர்" என பெயரிடப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட திரைப்படத்தில், எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர் ஜே.எம்.பஷீர் நடிக்கவுள்ளார்.

இதில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் த்ரிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

எம்ஜிஆரின் சினிமா பயணம் மற்றும் அரசியல் எழுச்சி உள்ளிட்ட பல முக்கிய கட்டங்களை இந்த படம் விவரிக்கவுள்ளது.