பயோபிக்கில் நடிகை ரஷ்மிகா மந்தனா நடிப்பதாக தகவல்
பழம்பெரும் கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் பயோபிக்கில், நடிகை ரஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கௌதம் தின்னனூரி இயக்கும் இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் 16-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெத்லஹேம் குடும்ப யூனிட் படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியீடு
நிவின் பாலி, மமிதா பைஜு நடிப்பில் உருவாகியுள்ள பெத்லஹேம் குடும்ப யூனிட் திரைப்படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியாகியுள்ளது. கிரிஷ் ஏ.டி. இயக்கியுள்ள இந்தப் படம், வரும் செப்டம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. குடும்பம், நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் படம் உருவாகியுள்ளது.