தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள 'ஓஜி' திரைப்படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. சுஜீத் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன், இம்ரான் ஹாஷ்மி, பிரகாஷ் ராஜ், ஸ்ரீயா ரெட்டி, அர்ஜுன் தாஸ், ஷாம் மற்றும் ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் நாளை மறுநாள் உலகளவில் வெளியாகிறது.