ஃபகத் ஃபாசில் 
சினிமா

ஃபகத் ஃபாசில் நடிக்கும் புதிய திரைப்படம்

படத்துக்கு "அசரீரி" என பெயர் சூட்டப்பட்டுள்ளது 2027 ஜனவரி 1-ம் தேதி திரைக்கு வரும் படம்

Manigandan Raja

ஃபகத் ஃபாசில் நடிக்கும் புதிய திரைப்படத்துக்கு "அசரீரி" என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில், நெடுஞ்சாலை, கருடன் திரைப்படங்களில் நடித்த ஷிவதா, சேத்தன், ஹரிஷ் உத்தமன், கருணாகரன், சரண் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரிக்கும் இந்த படம், 2027 ஜனவரி 1-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.